×

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து இன்று முதல் 26ம் தேதி வரை திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பதி பிரம்மோத்ஸவம் திருவிழாவை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வாயிலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவலின் படி, 2023-ல் திருப்பதி, திருமலையில் இரண்டு முறை “பிரம்மோத்ஸவம்” திருவிழா நடைபெற உள்ளது.

இத்திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக இந்த வருடம் 2023-ல் திருப்பதி, திருமலையில் இரண்டாவது முறையாக நடைபெற உள்ள “பிரம்மோத்ஸவம்” திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் இன்று முதல் 26ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது.

மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து இன்று முதல் 26ம் தேதி வரை திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tirupati ,Brahmotsavam ,CHENNAI ,Tirupati Brahmotsavam ,Tirupati Brahmotsavam festival ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...