×

கீழ்வேளூர் அருகே கால்நடை மருத்துவ முகாம்

 

கீழ்வேளூர், அக்.13: கீழ்வேளூர் அருகே ஆழியூரில் கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஆழியூர் ஊராட்சி கடம்பரவாழ்க்கை கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை முருகேசன் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.

கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஊசி, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. முகாமில் சிக்கல் கால்நடை உதவி மருத்துவர் லாரன்ஸ் மற்றும் பூபதி ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

The post கீழ்வேளூர் அருகே கால்நடை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Kilvellur ,Kilivelur ,Azhiyur ,Nagai district ,Kilyvellur ,Dinakaran ,
× RELATED கீழ்வேளூர் அருகே மேலஇலுப்பூர் பிடாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்