×

அந்தியூர் அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடக்கிறது

 

அந்தியூர்,அக்.13: அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய ஆலோசனை குழு உறுப்பினரும் அந்தியூர் எம்எல்ஏவுமான வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில்,புதிய அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு திட்டம்,மூன்று சக்கர வாகனம்,சக்கர நாற்காலி,தொலைபேசி,பஸ்- ரயில் பாஸ் மற்றும் காதுகேளாருக்கான உபகரணங்கள்,உதவித்தொகை புதியதாக பெறவும்,உதவித்தொகை குறைவாக பெற்று வருபவர்கள்,தேவைப்படுவோருக்கான விண்ணப்பித்தலுக்கு வருகை தரலாம்.

அப்படி வரும்போது குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படங்கள் இரண்டு ஆகியவைகளை முகாம் நடைபெறும் இடத்திற்கு கொண்டு வர வேண்டும். மேலும் இங்கு மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு உடனடியாக புதிய அடையாள அட்டை வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post அந்தியூர் அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Andhiur Government School ,Andhiyur ,Andhiyur Government Boys High School ,Tamil Nadu ,Andhiyur Government School ,
× RELATED அந்தியூர் அருகே கால்நடை தீவனப் போருக்கு மர்மநபர்கள் தீ வைப்பு