×

2வது நாளாக 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, அக்.13: கர்நாடக மாநிலம், தென்பெண்ணையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 224 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 440 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது 24.27 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அதே போல், கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நேற்று முன்தினம் 1114 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 1160 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பை கருதி, ஆற்றில் விநாடிக்கு 1410 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு, 2வது நாளாக நேற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேஆர்பி அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 50.30 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

The post 2வது நாளாக 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,South Pennayar, Karnataka State ,Krishnagiri KRP dam ,Dinakaran ,
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு