×

சொக்கநாதர் கோயிலில் முகூர்த்த கால் நடும் விழா

 

சிங்கம்புணரி, அக்.13: சிங்கம்புணரி அருகே அருகே முறையூரில் பழமை வாய்ந்த மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாலாபிசேக விழா செய்யப்பட்டு கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது. இதில் கோவிலின் கிழக்கு மற்றும் தெற்கு புறங்களில் ராஜகோபுரங்கள் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதிகள், கல் மண்டபங்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேகப் பணிகள் நிறைவு பெற்றது.

இதைத் தொடர்ந்து நவம்பர் 16ம் தேதி தேதி கும்பாபிஷேக விழா நடத்த கிராம மக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கோவிலின் முன்பு யாகசாலை பூஜைகள் தொடங்குவதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை சுரேஷ் குருக்கள் செய்திருந்தார். இதில் தேவஸ்தான கண்காணிப்பாளர், ஜெய் கணேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், சாமியாடி கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சொக்கநாதர் கோயிலில் முகூர்த்த கால் நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Sokkanathar temple ,Singampunari ,Meenakshi ,Chokkanath ,Matyoor ,Sivagangai ,
× RELATED சிங்கம்புணரியில் எருதுகட்டு விழா