×

நிப்ட்-டீ கல்லூரியில் மாநிலங்களின் ஓவியங்களை வரைந்து மாணவர்கள் அசத்தல்

 

திருப்பூர், அக். 13: திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்பு கல்லூரியில், ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறையை சேர்ந்த மாணவர்கள், இந்திய மாநிலங்களில் பாரம்பரியமான ஓவியங்களை காட்சிப்படுத்தினர். ஓவியங்களை அட்டை கேன்வாஷ், கண்ணாடி, பாக்குமட்டை போன்ற பலவகை பொருட்களை பயன்படுத்தி வரைந்தனர்.

மேலும், 2ம் ஆண்டு ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் மாணவர்கள் தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றும் விதமாக உள்ள தஞ்சை பெரிய கோவிலை முப்பரிமான வகையில் வரைந்தனர். வெளிமாவட்டம் மற்றும் ெவளிமாநிலங்களின் சிறப்புகளையும் ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தி, அவற்றை வரைபடமாக துறை பேராசிரியர்களின் உதவியுடன் கல்லூரி மாணவர்களுக்கு காட்சிப்படுத்தினர். இதனை கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

The post நிப்ட்-டீ கல்லூரியில் மாநிலங்களின் ஓவியங்களை வரைந்து மாணவர்கள் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Nifty-Dee College ,Tirupur ,Nipt-Tee Knitwear Design College ,Tirupur Mudalipalayam ,Nipt-Tee College ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...