×
Saravana Stores

மயிலாடும்பாறை அருகே ரூ.1.44 கோடி மதிப்பில் தார்ச்சாலை

வருசநாடு, அக். 13: மயிலாடும்பாறை அருகே ரூ.1.44 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார். மயிலாடும்பாறை அருகே பொன்நகர்- பொன்னன்படுகை விலக்கு வரையிலான தார்ச்சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதனை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை தொடர்ந்து 1 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பணிகளை கலெக்டர் ஷஜீவனா, நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். மேலும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தார் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை ஆண்டிபட்டி கோட்ட உதவி பொறியாளர் திருக்குமரன் உள்ளிட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post மயிலாடும்பாறை அருகே ரூ.1.44 கோடி மதிப்பில் தார்ச்சாலை appeared first on Dinakaran.

Tags : Mayiladumparai ,Varusanadu ,Collector ,Shajeevana ,
× RELATED க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில்...