×

பத்மநாபபுரம் கோட்டை சுவரை பராமரிக்க நடவடிக்கை அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

நாகர்கோவில், அக்.13: தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், பத்மநாபபுரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நவராத்திரி விழாவையொட்டி சுவாமி விக்ரகங்கள் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து உடைவாள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கேராளவில் ஒரு வார காலம் இருந்துவிட்டு இங்கு வரும். உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி கேரள மாநில அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்க கூடிய அமைச்சர்கள், தமிழக அமைச்சர், ஒன்றிய அமைச்சர் பெருமக்கள் வருகை தந்து பாரம்பரிய முறைப்படி நடந்தது. இது மகிழ்ச்சியான தருணம், எல்லா மக்களும் பங்கேற்று இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் பராமரிப்பில் இருக்கிறது. பத்மநாபபுரம் கோட்டை சுவர் பராமரிப்பின்றி இருந்தது. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை தொல்லியல் பிரிவிடம் இது தொடர்பாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீரமைக்க அதற்கான மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரு மாநில அரசும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சபரிமலையில் விமானநிலையம் அமைக்கப்படுமா?
கேரள தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சபரிமலை சீசன் வர இருக்கிறது. அதற்கான உயர்மட்ட குழு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. வரும் 18ம் தேதி கேரள முதல்வரின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அனைத்து துறைகளின் ஆய்வு கூட்டங்கள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு துறைகளும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. நவம்பர் 16ம் தேதி சபரிமலை நடை திறக்கும். அதற்கான பணிகளும் நடைபெறுகிறது. ஆன்லைனில் முன்பதிவு நடந்து வருகிறது. சபரிமலையில் விமானம் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்னும் நடைபெறவில்லை. நில ஆர்ஜிதம் செய்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஒன்றிய அமைச்சரின் உதவியுடன் நடைபெற்று வருகிறது. கேரளா தொல்லியல் துறை அமைச்சர் பத்மநாபபுரம் கோட்டை சுவர் சீரமைப்பு தொடர்பாக பேச்சு நடத்தி வருகிறார். தமிழ்நாடு அரசுடன் பேசி புனரமைப்பு பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பத்மநாபபுரம் கோட்டை சுவரை பராமரிக்க நடவடிக்கை அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Manothangaraj ,Nagercoil ,Tamil Nadu ,Dairy ,Minister ,Padmanabhapuram ,Navaratri festival ,Swami ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...