×

கங்கை நீருக்கு 18% ஜிஎஸ்டியா?..கார்கே புகாருக்கு ஒன்றிய அரசு மறுப்பு

புதுடெல்லி: கங்கை நீருக்கு 18 % ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறிய குற்றச்சாட்டை ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் மறுத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில், மோடி ஜி, இந்துக்களால் மிகவும் புனிதமாக கருதப்படும் ஜீவ நதி கங்கை. ஒரு சாதாரண இந்தியருக்கு பிறந்தது முதல் அவர்களின் வாழ்க்கையின் இறுதி வரையில் முக்கியமாக இந்த நதி விளங்குகிறது.
நீங்கள் இன்று உத்தரகாண்டுக்கு சென்று இருக்கிறீர்கள்.

ஆனால், உங்கள் அரசு கங்கை தீர்த்தத்துக்கு கூட 18 % ஜிஎஸ்டி விதித்துள்ளதாக தெரிகிறது. இதனால், கங்கை நீரை தங்கள் வீட்டில் வைத்திருப்போருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து,நீங்கள் யோசித்து பார்த்தது உண்டா? இது கொள்ளையின் உச்சமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,பூஜை பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பது பற்றி ஜிஎஸ்டி கவுன்சிலின் 14 மற்றும் 15 வது கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது.

அப்போது, பூஜை பொருட்களுக்கு விலக்கு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது.வீடுகளில் பூஜை செய்வதற்கு கங்கை நீரை பயன்படுத்துகின்றனர். ஜிஎஸ்டி அமலானதில் இருந்தே பூஜை பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

The post கங்கை நீருக்கு 18% ஜிஎஸ்டியா?..கார்கே புகாருக்கு ஒன்றிய அரசு மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Karke ,New Delhi ,Congress ,President ,Mallikarjuna Kharke ,Ganga ,Union ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை