×

ம.பியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500: 1 முதல் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி, காங்கிரஸ் அறிவிப்பு

மாண்ட்லா: மத்தியபிரதேசத்தின் மாண்ட்லா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். ரூ.500க்கு எரிவாயு சிலிண்டர், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500, கடன் தள்ளுபடி, 100 யூனிட் வரை இலவச மின்சாரம், 200 யூனிட்டுக்கு பாதி விலையில் மின்சாரம், 5 எச்பி மோட்டார்களை இயக்க விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும். 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.500, 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 மற்றும் 11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,500 கல்வி உதவித்தொகையாக அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

* 225 மாத பாஜ ஆட்சியில் 250 ஊழல்கள்
“மத்தியபிரதேசத்தில் 18 ஆண்டுகால பாஜ ஆட்சியில் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. தேர்தலின்போது வாக்குறுதிகளை தந்த பாஜ பிறகு மக்களை மறந்து விட்டது. மாநிலத்தில் 225 மாதகால பாஜ ஆட்சியில் வியாபம், மதிய உணவுத்திட்டம், கல்வி உதவித்தொகை உள்பட 250 ஊழல்கள் நடந்துள்ளன” என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.

The post ம.பியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500: 1 முதல் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி, காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Mandla ,General Secretary ,Priyanka Gandhi ,Madhya Pradesh ,Mandla district ,Dinakaran ,
× RELATED சந்தேஷ்காளி சம்பவம் பாஜக-வால்...