×

பள்ளி கல்வி துறை செயலாளராக குமரகுருபரன் ஐஏஎஸ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: வணிகவரி முதன்மை செயலாளராக இருந்த தீரஜ்குமார் தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குநராக இருந்த சந்தீப் நந்தூரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளராக இருந்த காகர்லா உஷா சுற்றுலாத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக இருந்த குமரகுருபரன் பள்ளி கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post பள்ளி கல்வி துறை செயலாளராக குமரகுருபரன் ஐஏஎஸ் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Kumaraguruparan ,School Education Department ,Chennai ,Tamil Nadu ,Chief Secretary ,Sivdas Meena ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளிகளில் இதுவரை 3.25 லட்சம் மாணவர் சேர்க்கை