×

கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண்: அரசாணை வெளியீடு

சென்னை: கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில், கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நேற்று அறிவிப்பாணையை வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கொரோனா பேரிடர் தொற்று காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில் ஊக்க மதிப்பெண் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: அனைத்து வகையான அரசு மருத்துவமனைகள், கொரோனா கேர் மையங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும். கொரோனா தொற்று காலத்தில் 6 – 12 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண், 12 – 18 மாதம் வரை பணிபுரிந்தவர்களுக்கு 4 மதிப்பெண், 18-24 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 4 மதிப்பெண், 24 மாதத்திற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள், தங்களது சேவையை உறுதி செய்யும் வகையில் கொரோனா பணிச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெற்று, அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

The post கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : corona epidemic ,Chennai ,Tamil Nadu government ,corona ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...