சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 10.11.2021 தேதியிட்ட நடவடிக்கையின் மூலம் ‘தென்னை நார் உடைத்தல், டி-பைபர், பித் பதப்படுத்துதல் தொழில் ஆகியவற்றை ஆரஞ்சு வகையின் கீழ் வகைப்படுத்தியது. இதற்கிடையில், தென்னை நார் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பல்வேறு சங்கங்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் 10.11.2021 தேதியிட்ட நடவடிக்கையை திரும்ப பெற்று, தென்னை நார் தொழிற்சாலைகளையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் கோரிக்கைகளை வைத்தனர்.தென்னை நார் உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களில் வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்திக்காக குறு மற்றும் சிறிய வகை தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதற்கும், மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் தென்னை நார் தொழிற்சாலைகள் கணிசமான பங்களிப்பை அளித்து வருவதாலும், ‘தென்னை நார் தயாரித்தல், டி-பைபர், பித் பதப்படுத்துதல் தொழில் ஆகியவற்றை ஆரஞ்சு வகையின் கீழ் வகைப்படுத்திய 10.11.2021 தேதியிட்ட வாரியத்தின் நடவடிக்கை திரும்பப் பெறப்படுகிறது.
The post குறு மற்றும் சிறு தொழிற்சாலைகளை ஊக்குவிக்க தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு சலுகை: மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.
