×

திடீர் உடல் நலக்குறைவால் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா சென்னை மருத்துவமனையில் அனுமதி: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

சென்னை: திடீர் உடல் நலக்குறவைால் பாஜ மூத்த தலைவர்களின் ஒருவரான எச்.ராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிழ்நாடு பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருபவர் எச்.ராஜா. கடந்த 5ம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜ மாவட்ட தலைவர் கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பிறகு 10ம் தேதி நடைபெற்ற மையக்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், பாஜ கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். இதையடுத்து அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது உடல்நலம் பாதிப்பு குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எச்.ராஜாவின் அட்மின் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சில தினங்களுக்கு அன்றாட பணிகளில் ஈடுபட முடியாது’’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.ராஜாவின் உடல் நிலையில் என்ன பாதிப்பு? அப்பல்லோ மருத்துவமனையில் ஏன் அனுமதிக்கப்பட்டுள்ளார்? என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அவரது உடல் நலம் குறித்து பாஜ முக்கிய நிர்வாகிகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

The post திடீர் உடல் நலக்குறைவால் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா சென்னை மருத்துவமனையில் அனுமதி: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : BJP ,H.Raja ,Chennai ,
× RELATED ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி...