×

ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஒடுக்கப்பட்டது போல் ஹமாஸ் இயக்கமும் ஒடுக்கப்படும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேட்டி

இஸ்ரேல்: ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஒடுக்கப்பட்டது போல் ஹமாஸ் இயக்கமும் ஒடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனை சந்தித்த பின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் நடத்தப்பட்ட விதத்திலேயே ஹமாஸ் இயக்கமும் நடத்தப்பட வேண்டும். ஹமாஸ் இயக்கத்தினரை எந்த தலைவரும் சந்திக்கக் கூடாது; எந்த நாடும் புகலிடம் அளிக்கக் கூடாது என்று குறிப்பிட்டார். இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்ததற்கு, பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

The post ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஒடுக்கப்பட்டது போல் ஹமாஸ் இயக்கமும் ஒடுக்கப்படும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Hamas ,ISIS ,Israeli ,Netanyahu ,Israel ,America ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் விமான தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் பலி