×

பீகார் ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சகமும், ஒன்றிய அரசும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!

டெல்லி: பீகார் ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சகமும், ஒன்றிய அரசும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்போர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு வடகிழக்கு அதிவிரைவு ரயில் 21 பெட்டிகள் தடம் புரண்டன. டெல்லி ஆனந்த விகாரில் இருந்து அசாம் காமாக்யா நோக்கி சென்ற ரயில் இரவு 9:35 மணி அளவில் ரகுநாத்போர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது.

இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த நிலையில், பீகார் ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சகமும், ஒன்றிய அரசும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதுதில்லியில் இருந்து அஸ்ஸாம் நோக்கிச் செல்லும் நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் பீகார் மாநிலம் பக்ஸரில் தடம் புரண்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

இந்த பயங்கர விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய காங்கிரஸ் தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஜூன் 2023 பாலசோர் ரயில் விபத்துக்குப் பிறகு இது இரண்டாவது பெரிய தடம் புரண்ட விபத்து. இதற்கு ரயில்வே அமைச்சகம் மற்றும் ஒன்றிய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post பீகார் ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சகமும், ஒன்றிய அரசும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே! appeared first on Dinakaran.

Tags : Ministry of Railways ,Union Government ,Bihar ,train ,Malikarjuna Karke ,Delhi ,Congress ,Railways Ministry ,Railway Ministry ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...