×

தேசிய பிற்படுத்தப்பட்ட நல ஆணையத்துக்கு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள் எப்போது நியமனம்?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்ட நல ஆணையத்துக்கு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள் எப்போது நியமனம் செய்யப்படுவர் என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் பதவிகள் 2022 முதல் காலியாக உள்ளதாக தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு தொடர்ந்த வழக்கில் நவம்பர் 8க்குள் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைவரும், 2023 மார்ச் மாதம் ஒரு உறுப்பினரும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

The post தேசிய பிற்படுத்தப்பட்ட நல ஆணையத்துக்கு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள் எப்போது நியமனம்?: ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : National Backward Welfare Commission ,ICOURT ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி