சென்னை: சென்னையில் இறந்து பிறந்த குழந்தையை கூவம் ஆற்றில் வீசிய தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் நேற்று தம்பதிக்கு குழந்தை இறந்து பிறந்துள்ளது. இறந்து பிறந்த குழந்தையை, எழும்பூர் கோ ஆப்டெக்ஸ் எதிரே உள்ள கூவம் ஆற்றில் கட்டை பையில் வைத்து தந்தை வீசியுள்ளார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் குழந்தையின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். குழந்தையின் சடலத்தை கூவம் ஆற்றில் வீசிய தந்தையிடம் எழும்பூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
The post சென்னையில் பரபரப்பு!: இறந்து பிறந்த குழந்தையை கூவம் ஆற்றில் வீசிய தந்தை..போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.