×

கோபி சுற்றுப்புற பகுதியில் கடுமையான பனி மூட்டம்: வாகன ஓட்டுநர்கள் அவதி

கோபி: கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடுமையான பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டுநர்கள் அவதியடைந்தனர்.  கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல் கோபி, மொடச்சூர், கரட்டூர், குள்ளம்பாளையம், நல்லகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் கடுமையான பனிபொழிவு காணப்பட்டது. இதனால், ஈரோட்டில் இருந்து கோபி, சத்தியமங்கலம் வழியாக மைசூர் செல்லும் வாகனங்கள், கோபி, அந்தியூர் போன்ற பகுதியில் இருந்து திருப்பூர் செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மிகவும் மெதுவாக சென்றன.  இதில், 10 அடி தூரத்தில் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், அதிகாலை முதல் தினசரி மார்க்கெட் செல்பவர்கள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் இன்று பெரிதும் அவதிப்பட்டனர். கடந்த சில நாட்களாக தொடர் கனமழை காரணமாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது….

The post கோபி சுற்றுப்புற பகுதியில் கடுமையான பனி மூட்டம்: வாகன ஓட்டுநர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kobe ,Gobi ,Dinakaran ,
× RELATED கோபி அருகே ஒத்தக்குதிரையில்...