×

கும்பகோணம் மகாளய அமாவாசையை முன்னிட்டு 220 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: மேலாண் இயக்குநர் அறிவிப்பு

கும்பகோணம்: அக்டோபர்14 அன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு 220 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ராமேஸ்வரம், பூம்புகார், கோடியக்கரை, திருவையாறு ஆகிய இடங்களுக்கு 220 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சிறப்பு பேருந்துகள் நாளை, நாளை மறுநாளும் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழக குடந்தை கோட்ட மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் மகாளாய அமாவாசையையொட்டி 13.10.2023 மற்றும் 14.10.2023 நாட்களில் பொது மக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை, தேவகோட்டை, இராமநாதபுரம், பரமக்குடி, சாயல்குடி, தேவிபட்டினம், மானாமதுரை, ஆகிய இடங்களிலிருந்து இராமேஸ்வரத்திற்கும் அதே போல் இராமேஸ்வரத்திலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் இரவு/ பகலாக 150 சிறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்கவும்,

தஞ்சாவூர், கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, திருமானூர், ஆகிய இடங்களிலிருந்து திருவையாறுக்கும் அதேபோல் திருவையாற்றிலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் 25 சிறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்கவும், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, பொறையார் ஆகிய இடங்களிலிருந்து பூம்புகாருக்கும், அதேபோல் பூம்புகாரிலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் 20 சிறப்பு பேருந்துகளும், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய இடங்களிலிருந்து கோடியக்கரைக்கும் அதேபோல் கோடியக்கரையிலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் 25 சிறப்பு பேருந்துகளும்,

திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்தும் பெரம்பலூர், மணப்பாறை, துறையூர், அரியலூர், விராலிமலை ஆகிய இடங்களிலிருந்தும் சமயபுரத்திற்க்கும் அதேபோல் சமயபுரத்திலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கும் அதேபோல் ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கும் 50 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் என மேற்படி அனைத்து தடங்களிலும் என மொத்தமாக 270 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இராமேஸ்வரம் செல்லவும் இராமேஸ்வரத்திலிருந்து திரும்ப வரவும் பயணிகள் முன்னதாக முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்து கழகங்கள் கணித்து அதற்கு ஏற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் எனவே பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி இப்பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ள வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளளது.

The post கும்பகோணம் மகாளய அமாவாசையை முன்னிட்டு 220 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: மேலாண் இயக்குநர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Mahalaya Amavasai ,Rameswaram ,Bhoompukar ,Kodiakkarai ,Thiruvaiyaru ,Melan ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...