×

கொலு பொம்மைகள் விற்பனைக்கு குவிப்பு சென்னிமலையில் நாளை நடக்கும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு

ஈரோடு, அக். 12: சென்னிமலையில் நாளை (13ம் தேதி) நடக்கும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் கடந்த மாதம் 17ம் தேதி கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் ஜெபம் செய்து கொண்டிருந்தபோது, 20க்கும் மேற்பட்ட நபர்கள் அங்கு வந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களை அடித்து உதைத்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இப்பிரச்னையின் தொடர்ச்சியாக இந்து முன்னணியை சேர்ந்த சிலர் சென்னிமலையில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நாளை (13ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்துவதாக துண்டு பிரசுரம் மூலமாக அறிவித்துள்ளனர். மேலும், யூ டியூப் சேனல் மூலமாகவும் பரப்புரை செய்து வருகின்றனர். இதனால், சென்னிமலையில் பதட்டமான சூழல் நிலவுகிறது. மத வெறியை தூண்டும் வகையிலும், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பேசி மதக்கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஈடுபடுகின்றனர். எனவே, சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post கொலு பொம்மைகள் விற்பனைக்கு குவிப்பு சென்னிமலையில் நாளை நடக்கும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Kolu ,SP ,Hindu ,Front ,Chennimalai ,Erode ,Erode SP ,Dinakaran ,
× RELATED அவதூறு பேச்சு இந்து முன்னணி எஸ்பியிடம் புகார்