×

தமிழ்நாடு கவர்னர் மாளிகையில் நடைபெறும் நவராத்திரி கொலுவை காண பொது மக்களுக்கு அனுமதி

சென்னை: தமிழக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கை: ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் ‘நவராத்திரி கொலு’ கொண்டாட்டங்களில் பங்கேற்க பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயர், வயது, பாலினம், முகவரி, தொடர்பு எண், புகைப்பட அடையாள சான்று மற்றும் வருகைக்கான தேதி உள்ளிட்ட விவரங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் பிற விவரங்களுடன் அனுப்பப்படும் உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டதற்கான சான்றாக அமையும். பார்வையாளர்கள், சென்னை ஆளுநர் மாளிகையின் வாயில் எண். 2 இல் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் அசல் புகைப்பட அடையாள சான்று ஆவணத்துடன் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் வர வேண்டும்.

The post தமிழ்நாடு கவர்னர் மாளிகையில் நடைபெறும் நவராத்திரி கொலுவை காண பொது மக்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Navratri Kolu ,Tamil Nadu Governor's House ,Chennai ,Governor's ,House ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...