×

ராஜஸ்தான் தேர்தல் நவ. 25ம் தேதிக்கு மாற்றம்

புதுடெல்லி: ராஜஸ்தான், மபி, சட்டீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா சட்ட பேரவைகளுக்கான தேர்தல் தேதியை கடந்த திங்களன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. சட்டீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டமாகவும், மபியில் நவ.17, மிசோரத்தில் நவ.7, ராஜஸ்தானில் நவ.23, தெலங்கானாவில் நவ.20ம் தேதியும் ஒரே கட்ட தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,ராஜஸ்தானில் 23ம் தேதி தேவ் உத்தானி ஏகாதசி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து மாநிலத்தில் நவ.23ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நேற்று விடுத்த அறிக்கையில், குறிப்பிட்ட நாளில் ஏராளமான திருமணங்கள் நடைபெறவிருக்கின்றன. இதனால் வாக்களிக்க வரும் வாக்காளர்களின் பங்கேற்பு குறைவாகலாம் என கருதுகிறோம். தேர்தல் அன்று போக்குவரத்து பிரச்னைகளினால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படும். அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் விடுத்த கோரிக்கையை அடுத்து ராஜஸ்தானில் வாக்குபதிவு தேதி நவ. 25க்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால்,தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீடு, வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி ஆகியவை தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில் மாற்றம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ராஜஸ்தான் தேர்தல் நவ. 25ம் தேதிக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Rajasthan Election ,New Delhi ,Election Commission ,Rajasthan ,Mabi ,Chhattisgarh ,Mizoram ,Telangana Legislative Assemblies ,25th ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு விவரங்களை 2 நாளில்...