×

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து விவகாரம் நடிகர் எஸ்.வி.சேகர் மீதான வழக்கில் 19ல் சாட்சி விசாரணை

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து 2018ம் ஆண்டு சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கையும், நெல்லையில் எஸ்.வி.சேகர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளையும் 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி.சேகர் மற்றும் வழக்கு தொடர்ந்த கோபால்சாமி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அப்போது எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டு குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு எஸ்.வி.சேகர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார் . இதைத்தொடர்ந்து மனுதாரரிடம், எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக சொல்கிறார். நீங்கள் வழக்கை தொடர விரும்புகிறீர்களா என்று நீதிபதி கேட்டார். அதற்கு மனுதாரர் கோபால்சாமி மறுத்தார். இதனால், சாட்சி விசாரணைக்காக வழக்கை வருகிற 19ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து விவகாரம் நடிகர் எஸ்.வி.சேகர் மீதான வழக்கில் 19ல் சாட்சி விசாரணை appeared first on Dinakaran.

Tags : SV Shekhar ,Chennai ,S.V. Shekhar ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!