×

தீபாவளிக்கு தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட 28,844 பேருந்துகள் மூலம் 14.24 லட்சம் பயணிகள் பயணம்: போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட 28,844 பேருந்துகள் மூலம் 14,24,649 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளிக்காக கடந்த 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் 6 இடங்களிலிருந்து மொத்தம் 9,472 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4,08,049 பயணிகளும், பல்வேறு பகுதிகளிலிருந்து மற்ற பிற ஊர்களுக்கு 4,960 பேருந்துகள் இயக்கப்பட்டு 2,96,000 பயணிகளும் என மொத்தமாக 14,432 பேருந்துகள் வாயிலாக, 7,04,049 பயணிகள் பயணம் செய்தனர். தீபாவளி முடிந்த பின்னர், கடந்த 5 முதல் 8ம்தேதி வரை பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 10,987 பேருந்துகள் இயக்கப்பட்டு 5,49,350 பயணிகளும், பல்வேறு இடங்களிலிருந்து மற்ற பிற ஊர்களுக்கு 3,425 பேருந்துகள் இயக்கப்பட்டு 1,71,250 பயணிகளும் என மொத்தமாக 14,412 பேருந்துகள் வாயிலாக, 7,20,600 பயணிகள் பயணம் செய்தனர். தீபாவளியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில், மொத்தமாக இயக்கப்பட்ட 28,844 பேருந்துகள் வாயிலாக, 14,24,649 பயணிகள் பயணம் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 57 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக மொத்தமாக 8 கோடியே 37 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மேலும், கடந்த 1, 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 17,694 தினசரி பேருந்துகளுடன், 966 சிறப்புப் பேருந்துகள் 3 கோடியே 19 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, 4 கோடியே 33 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக 80 கோடியே 12 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டை விட அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு கூடுதலாக 3,705 தினசரி பேருந்துகளும், 83 சிறப்புப் பேருந்துகளும் 64 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, ஒரு கோடியே 52 லட்சம் பயணிகள் அதிகமாக பயணம் செய்ததன் மூலம், 12 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.தீபாவளிக்கு பின்பு, கடந்த 5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 15,903 தினசரி பேருந்துகளுடன், 519 சிறப்புப் பேருந்துகள் 2 கோடியே 88 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, 3 கோடியே 93 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக 74 கோடியே 36 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டை விட அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு கூடுதலாக 1,882 தினசரி பேருந்துகள், 42 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, ஒரு கோடியே 35 லட்சம் பயணிகள் கூடுதலாக பயணம் செய்ததன் வாயிலாக 7 கோடி 39 லட்சம் ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது….

The post தீபாவளிக்கு தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட 28,844 பேருந்துகள் மூலம் 14.24 லட்சம் பயணிகள் பயணம்: போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Diwali ,Transport Minister ,Rajanganappan ,Chennai ,festival ,Rajakanappan ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...