×

சாலை முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்கியது ஆந்திர உயர்நீதிமன்றம்

ஆந்திரா: அமராவதி உள்வட்ட சாலை முறைகேடு வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாடியுடுவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. வழக்கில் அக்.16 வரை சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய கூடாது எனவும் ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 2014 முதல் 2019 வரை ஆந்திர முதல்வராக இந்தார். அவரது பதவிக் காலத்தில் மாநில திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை மாநில சிஐடி போலீஸார் கைது செய்தனர்.

விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவரை விஜயவாடா லஞ்சஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் சந்திரபாபுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ராஜமகேந்திர வரம் மத்திய சிறையில் சந்திரபாபு அடைக்கப்பட்டார். அவருக்கு 7691 எனும் கைதி எண் வழங்கப்பட்டது. அவருக்கு வீட்டு உணவு, மருந்து, மாத்திரைகள், நாளிதழ்கள் வழங்கப்படுகிறது. ஏசி அறை, டி.வி. உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்து ஆந்திர மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் மக்களின்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் பாது காப்பு கருதி அதுவரை அவரை வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் எனவும் அவரது வழக்கறிஞர் சித் தார்தா லூத்ரா சார்பில் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், வீட்டுக்காவலில் சந்திரபாபு நாயுடுவுக்கு பாதுகாப்பு இருக்காது. சிறையில் தான் அவருக்கு அதிக பாதுகாப்பு உள்ளது என கூறி, வீட்டுக்காவல் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு குறித்து இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி அமராவதி உள்வட்ட சாலை முறைகேடு வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாடியுடுவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

 

The post சாலை முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்கியது ஆந்திர உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Andhra High Court ,Chandrababu Naidu ,Andhra ,Chief Minister ,Chandrababu Nadiyudu ,Amaravati Inner Circle ,Dinakaran ,
× RELATED ஆந்திராவில் ஆட்சியை பிடித்த நிலையில்...