×

மணிப்பூர் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்..!!

இம்பால்: மணிப்பூர் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டுக்கு தன்னை மாற்றக் கோரி எம்.வி.முரளிதரன் கோரிக்கை வைத்திருந்த நிலையில் கொல்கத்தாவுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மெய்தி சமுதாய மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கடந்த மார்ச் 27ம் தேதி தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பின் காரணமாக குக்கி மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

போராட்டங்கள் வெடித்தன. தொடர்ந்து படிப்படியாக வன்முறையாக மாறி, தற்போது வரை மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவில்லை. மணிப்பூர் வன்முறைக்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும், மிக முக்கிய காரணமாக இந்த தீர்ப்பு கருதப்படுகிறது. இதனிடையே, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. வாய்ப்பு அளிக்கப்பட்டும் அதை திறுத்துவதற்கான வாய்ப்பை முரளிதரன் பயன்படுத்தவில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சாடியிருந்தார்.

அவரை பணியிடை மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை அளித்திருந்தது. இத்தகைய சூழலில் சர்ச்சைக்குரிய மணிப்பூர் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் ஒன்றிய அரசு இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் அலுவலகம் மூலமாக வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

The post மணிப்பூர் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Manipur High Court ,Chief Justice MV Muralitharan ,Calcutta High Court ,Chief Justice ,MV Muralitharan ,Chennai High Court ,MV ,Muralitharan ,Dinakaran ,
× RELATED மெய்தி பிரிவினரை பழங்குடியினர்...