×

கோவையில் குடிநீர் தட்டுப்பாடு சரிசெய்யப்படும்; பில்லூர் 3வது குடிநீர் திட்டம் 20 நாட்களில் செயல்பாட்டுக்கு வரும்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதில்

சென்னை: பில்லூர் 3வது குடிநீர் திட்டம் 20 நாட்களில் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் தொடங்கி சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பில்லூர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தபின்னர் கோவை மாநகரின் குடிநீர் தட்டுப்பாடு முற்றிலும் சரி செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். பில்லூர் 3வது குடிநீர் திட்டம் 20 நாட்களில் செயல்பாட்டுக்கு வரும். பில்லூர் திட்டம் தொடங்கியதும் 24மணி நேரமும் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கே.என்.நேரு பேரவையில் தெரிவித்தார்.

சேதமடைந்த குழாய்கள் சீரமைக்கப்படுமா?:

காவிரியிலிருந்து நீர்வரும் குழாய்கள் சேதமடைந்துள்ளதால் அவற்றை சீரமைக்க வேண்டும். மணப்பாறை மேட்டுப் பகுதியாக உள்ளதால், வெள்ளப் பெருக்கில் கூட காவிரி நீர் கிடைக்காது என பேரவையில் அப்துல் சமத் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, சேதடைந்த குழாய்களை மாற்றியமைக்க ரூ.178 கோடி ஒதுக்கி பணிகள் நடைபெறுகின்றன என குறிப்பிட்டார்.

The post கோவையில் குடிநீர் தட்டுப்பாடு சரிசெய்யப்படும்; பில்லூர் 3வது குடிநீர் திட்டம் 20 நாட்களில் செயல்பாட்டுக்கு வரும்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதில் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Pillur ,Minister ,KN Nehru ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...