×

“ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்கமுடியுமா” 100வயதை கடந்த முதியவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் நடனத்தை பார்த்து நீலகிரி ஆட்சியர் கண்ணீர்..!!

நீலகிரி: கூடலூரில் 100வயதை கடந்த முதியவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் தாயின் பெருமைகளை விளக்கும் பாடலுக்கு முதியவர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களின் நடனத்தை பார்த்து ஆட்சியர் கண்ணீர்விட்டார். நீலகிரி மாவட்டம் கூடலூரில் தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்படும் முதியோர் இல்லத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் பலர் பராமரிக்கப்படுகின்றன.

இதில் 100வயதை கடந்த முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கலந்து கொண்டார். அவர் முன்பாக “ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்கமுடியுமா” என்ற பாடலுக்கு முதியவர்கள் நடனமாடினர். கள்ளம்கபடம் இன்றி முதியவர்கள் நடனமாடியதை கண்டு ஆட்சியர் அருணா கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் முதியவர்களை ஆட்சியர் கவனித்தார்.

The post “ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்கமுடியுமா” 100வயதை கடந்த முதியவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் நடனத்தை பார்த்து நீலகிரி ஆட்சியர் கண்ணீர்..!! appeared first on Dinakaran.

Tags : Kasrinda ,Amma ,Nilgiri ,Nilgiris ,Kudalur ,
× RELATED திருவள்ளூர் பகுதியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல்