×

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை!: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரிப்பு..!!

தருமபுரி: கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர் வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியில் இருந்து 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு, மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து இன்று காலை 4 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளின் தண்ணீர் தமிழக – கர்நாடாக மாநில எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும். கர்நாடகா அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக குறைவான அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த 2 தினங்களாக 1500 கனஅடியாக நீடித்து வந்தது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர் வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியில் இருந்து 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதிக நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, ஐவர்பாணி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

The post காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை!: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Okanagan Cauvery ,Dharampuri ,Karnataka ,Okenakal Cauvery… ,Okenakal Cauvery ,Dinakaran ,
× RELATED வரலாறு காணாத வெயில்!: நீர்வரத்தின்றி...