×

கே.ஆர்.பி. அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கே.ஆர்.பி. அணை முழு கொள்ளளவை எட்டியது. கே.ஆர்.பி. அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

The post கே.ஆர்.பி. அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : KRP ,Krishnagiri ,Krishnagiri district ,K.R.P. ,Dinakaran ,
× RELATED கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 350 கனஅடி