×

லாண்டரி கடையில் பணம் திருடியவர் கைது

 

ஈரோடு, அக்.11: ஈரோடு வெட்டுக்காட்டு வலசு மடிகாரர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (41). இவர், வீரப்பம்பாளையம் பகுதியில் லாண்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி சரவணன் வழக்கம்போல் இரவு வேலை முடித்து விட்டு கடையை பூட்டி சென்றார். மறுநாள் 5ம் தேதி காலை கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்தது.

இதுகுறித்து சரவணன் ஈரோடு வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், சரவணன் கடையில் திருடியது ஈரோடு சூரம்பட்டி வலசு கோவலன் வீதியை சோ்ந்த வேலு மகன் மணிகண்டன்(29) என்பது தெரியவந்தது. இதையடுத்து வடக்கு போலீசார் மணிகண்டனை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். மணிகண்டன் மீது அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

The post லாண்டரி கடையில் பணம் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Saravanan ,Valasu ,Madikar Colony ,Cuttakkatu, Erode ,Veerappampalayam ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலத்தில் காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்