×

கோவை வஉசி மைதானத்தில் கப்பல் வடிவ பொருட்காட்சி காண குவிந்த மக்கள்

 

கோவை, அக். 11: கோவை அவினாசி ரோடு வஉசி மைதானத்தில் பொழுதுபோக்கு பொருட்காட்சி கடந்த மாதம் 27ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதனை சென்னை புகழ் ஓம்சக்தி என்டர்டெயின்மென்ட் மற்றும் டிஜே அமேஸ்மென்ட் இணைந்து நடத்துகிறது. தினமும் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கிறது. பொதுமக்கள், குழந்தைகளை கவரும் வகையில் கப்பல் வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பாகுபலி செட்டிங், ரொமான்டிக் அனிமல்ஸ், ராட்டினம், ஜாயின்ட் வீல் உள்ளிட்ட 40 வகையான ராட்டினங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் அமர்ந்து மகிழ்ந்து வருகின்றனர். குழந்தைகளுக்கான ரயில், ஸ்கூட்டர் ராட்டினம், டோரா டோரா, பேய் வீடு, மேஜிக் ஷோ, பனி உலகம் போன்ற எண்ணற்ற சிறப்பம்சங்களும் இடம் பெற்றுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள ஏராளமான தின்பண்ட ஸ்டால்களில் டெல்லி அப்பளம், காளான், காலிபிளவர், பானிபூரி, பிரைடு ரைஸ், பர்கர் மற்றும் பீட்சா, டிபன் வகைகளை குடும்பத்துடன் அனைவரும் உண்டு மகிழ்கின்றனர்.

இங்கு வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சி ஏற்பாடுகளை சென்னை புகழ் ஓம் சக்தி என்டர்டைன்மென்ட் பங்குதாரர்கள் ஏ.மணி, எஸ்.பலராமன், என்.வி.ஆர்.ராஜா, டி.ஜே.அமேஸ்மெண்ட் உரிமையாளர் தினேஷ் ஆகியோர் செய்துள்ளனர். இந்த பொருட்காட்சி குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளதாகவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய இருப்பதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

The post கோவை வஉசி மைதானத்தில் கப்பல் வடிவ பொருட்காட்சி காண குவிந்த மக்கள் appeared first on Dinakaran.

Tags : Vausi Maidan ,Coimbatore ,Avinasi Road Vausi Maidan ,Vausi ,Maidan ,
× RELATED கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல்...