×

பெண் வார்டனிடம் நகை பறிக்க முயன்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேர் கைது

திருச்சுழி அக்.11: திருச்சுழி அருகே சாலையில் நடந்து சென்ற பெண் விடுதி வார்டனிடம் நகை பறிக்க முயன்ற 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.திருச்சுழி ம.ரெட்டியபட்டி அருகே உள்ள மண்டபசாலை புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்புலெட்சுமி. இவர் அரசு பெண்கள் பள்ளியின் விடுதி காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஒத்தக்கடை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் சுப்புலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர். கீழே விழுந்த சுப்புலெட்சுமி நகையை இறுக பற்றிக் கொண்டு கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். நகை பறிக்க முயன்ற இளைஞர்கள் பைக்கில் தப்பிவிட்டனர். இது குறித்து ம.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் சுப்புலட்சுமி புகாரளித்தார்.

போலீசார் அங்குள்ள கடை ஒன்றில் பதிவான சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து விசாரித்தனர். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம், ரெட்டையூரணி பகுதியை சேர்ந்த சண்முகநாதன் மகன் யுவஸ்ரீதர்(23), பரமக்குடி மணிநகர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் நகை பறிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெண் வார்டனிடம் நகை பறிக்க முயன்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,Thiruchuzhi ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி