×

அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி: முதல் பரிசு ரூ.5 ஆயிரம்

 

சிவகங்கை, அக்.11: சிவகங்கையில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம சார்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு அக்.14 அன்று காலை 6மணியளவில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடைபெறவுள்ளது.

13வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ தூரமும், 13வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10கி.மீ தூரமும், 15வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், 15வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15கி.மீ தூரமும், 17வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20கி.மீ தூரமும், 17வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15கி.மீ தூரமும் போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ,மாணவிகள் சைக்கிள் கொண்டு வரவேண்டும்.

இந்தியாவில் தயாரான சாதாரண கைப்பிடிகளை கொண்ட சைக்கிள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். கியர் சைக்கிள் மற்றும் ரேஸ் சைக்கிள் அனுமதிக்கப்பட மாட்டாது. தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர் கையொப்பமிட்ட வயது சான்று, ஆதார் கார்டு, பள்ளி அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு, முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000, 4முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 பரிசுத்தொகை வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி: முதல் பரிசு ரூ.5 ஆயிரம் appeared first on Dinakaran.

Tags : Anna Birthday Cycle Competition ,Sivagangai ,Anna ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...