- முத்துப்பேட்டை கோவிலூர் பைபாஸ் ரவுண்டனை
- நடுத்தர மையம்
- முத்துபதே
- கோவில்லூர் பைபாஸ் ரவுண்டனா
- முத்துப்பெட்டா
- முத்துப்பேட்டை கோஹ்லூர் பைபாஸ் ரவுண்டனா
- தினகாரான்
முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே கோவிலூர் பைபாஸ் ரவுண்டானா பகுதி சென்டர் மீடியனில் தென்னை மட்டை ஏற்றி வந்த லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முத்துப்பேட்டை பகுதியை கடந்து செல்லும் கிழக்கு கடற்கரை சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்டது. இதில் முத்துப்பேட்டை டவுனை ஒட்டியுள்ள இந்த சாலை மேற்கில் செம்படவன்காடு பகுதியிலும், கிழக்கில் ஆலங்காடு பகுதியிலும் பிரிந்து செல்கிறது. சுமார் 2 கி.மீ. தூரம் உள்ள இந்த சாலை இப்பகுதிக்கு பைபாஸ் சாலையாகவும் இருந்து வருகிறது. இப்பகுதியில் வயல்வெளிகள், ஏறி, குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை தூர்த்து இந்த சாலை அமைக்கப்பட்டது. இதில் சமீபத்தில் நெடுஞ்சாலைதுறை மராமத்து பணிகள் மேற்கொண்டு சுமார் 2 கி.மீ. தூர சாலையை பெயர்த்து, பழைய சாலை மட்டத்தை உயர்த்தி புதிதாக அமைத்தது. அதேபோல் இந்த சாலையில் தெற்கில் முத்துப்பேட்டை, வடக்கில் மன்னார்குடி, கிழக்கில் திருத்துறைப்பூண்டி, மேற்கில் பட்டுக்கோட்டை என நான்கு சாலைகள் பிரிந்து செல்கிறது. இப்பகுதியில் மிகப்பெரிய ரவுண்டானா, நான்கு சாலையில் சென்டர் மீடியன் அமைக்கும் பணி பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது.
The post முத்துப்பேட்டை கோவிலூர் பைபாஸ் ரவுண்டானா பகுதி சென்டர் மீடியனில் மோதி லாரி கவிழ்ந்தது appeared first on Dinakaran.