×

நெருங்கும் வடகிழக்கு பருவமழை காலம் ரூ.19 லட்சம் செலவில் ஆழித்தேருக்கு பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி மும்முரம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேருக்கு ரூ.19 லட்சம் செலவில் நகரும் வகையில் பைபர் கண்ணாடி கூண்டு புதிதாக அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என சிறப்பு பெற்றது. ஆழித் தேரானது மற்ற ஊர் தேர்களை போல்இல்லாமல் பட்டை வடிவமைப்பை கொண்டது. மொத்தம் 20 பட்டைகளை கொண்ட தேரானது நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதி 20 அடி உயரம், 2வது பகுதி 4 அடி உயரம், 3வது பகுதி 3 அடி உயரமும் கொண்டுள்ளது. 4வது பகுதியாக தேரின் மேடை பகுதி அமைக்கப்பட்டுள்ளது. 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட ஆழித் தேரானது 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உள்பட மொத்தம் 220 டன் எடை கொண்டது.

The post நெருங்கும் வடகிழக்கு பருவமழை காலம் ரூ.19 லட்சம் செலவில் ஆழித்தேருக்கு பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Thyagaraja ,Swamy ,Temple ,Azhither ,Monsoon ,
× RELATED திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்...