வலங்கைமான்: டெல்டா மாவட்ட விவசாயிகளை தென்மேற்கு பருவமழை கைவிட்ட நிலையில் குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் வடகிழக்கு பருவ மழை நீரை சேகரிக்கும் வகையில் நீர் வழித்தடங்களை சரி செய்ய விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவில் சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்து மகசூல் முடிவுற்ற நிலையில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவ மழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அதனை அடுத்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் வகையில் முன்கூட்டியே மேட்டூர் அணை பாசனத்துக்காக திறக்கப்பட்டது. இருப்பினும் தென்மேற்கு பருவமழை குறைவு மற்றும் கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு உரிய நீர் திறக்கப்படாதது ஆகிய காரணங்களால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்தது.
The post குளங்கள், நீர்வழித்தடங்களை சீரமைக்க வேண்டும் ஜனவரி மாத நீர்த் தேவைக்கு உதவும் appeared first on Dinakaran.
