×

திருவையாறு ஒன்றியக்குழு கூட்டம்

திருவையாறு: திருவையாறு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றிய குழுத்தலைவர் அரசாபகரன் தலைமை வகித்தார். ஆணையர்கள் ஜான்கென்னடி, காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேலாளர் பழனியம்மாள், ஒன்றிய பொறியாளர்கள் விஜயகுமார், தமிழ் மற்றும் கவுன்சிலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் அய்யாசாமி, ஜெயசீலன், பாஸ்கர், முகம்மது இக்பால் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். கோரிக்கைகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்கென்னடி, ஒன்றிய குழு தலைவர் அரசாபகரன் ஆகியோர் பதிலளித்து பேசினர். இந்த கூட்டத்தில் 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post திருவையாறு ஒன்றியக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvaiyaru union committee ,Thiruvaiyaru ,Thiruvaiyaru Panchayat Union Committee ,Union Committee ,President ,Arasabhakaran ,Dinakaran ,
× RELATED கழுத்து பயிராக இருக்கும் கதிர்களை...