×

மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை ரெய்டு

சென்னை: கரூர் மற்றும் நாமக்கல் மணல் குவாரிகளில், அமலாக்கத்துறை மீண்டும் சோதனையில் ஈடுபட்டது. கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த நன்னியூர் புதூர் மற்றும் மல்லம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகளில் நேற்று காலை 10 மணியளவில் தலா 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், மத்திய பாதுகாப்பு படை போலீசார் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். இந்த மணல் குவாரிகளில் அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதாக வந்த தகவலையடுத்து, அமலாக்கத்துறை மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐஐடி நிலஅளவு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் காவிரி ஆற்றுக்குள் அளவிடும் பணியில் ஈடுபட்டனர். மணல் குவாரி உரிமையாளர்களின் வீடுகளில் நடந்த சோதனையின் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மணல் அள்ளிய இடத்திற்கு சென்று பள்ளத்தின் அளவை கணக்கிடுவதும் இதுவே முதல்முறை. மாலை 6 மணி வரை நடந்த இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே ஒருவந்தூரில் செயல்படும் குவாரியிலும் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். ஆற்றில் மணல் எடுக்கும் இடம், மணல் அள்ளுவதற்காக எவ்வளவு ஆழம் மற்றும் நீளத்திற்கு குழி தோண்டியுள்ளனர் என்பது குறித்தும், கரையில் இருந்து ஆற்றுக்குள் எவ்வளவு தூரத்தில் மணல் எடுக்கப்படுகிறது, ஊருக்குள் இருந்து எவ்வளவு தூரம் என்பதை துல்லியமாக அளவீடு செய்தனர். இதற்காக ஹெலிகேமராவை பறக்க விட்டு, சோதனை நடத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனை நடத்தி விட்டு புறப்பட்டுச் சென்றனர்.

The post மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை ரெய்டு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Karur ,Namakkal ,Wangal ,Nanyur… ,Dinakaran ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...