×

கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம்

நெல்லை,அக்.11: சேரன்மகாதேவியில் கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வட்ட தலைவர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். அம்பை வட்ட தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மகளிர் அணி மாவட்டத் தலைவி கனகலெட்சுமி வரவேற்றார். மாவட்டத் தலைவர் நாராயணன், செயலாளர் முருகன், பொருளாளர் முகம்மது ரபீக், மாநில செயலாளர் பிச்சுக்குட்டி, மகளிர் அணி சுப்புலட்சுமி, மாநில தலைவர் முத்தையா பேசினர். கிராம உதவியாளர்களை பணிமாற்றம் செய்யப்பட்டதை ரத்துசெய்ய வேண்டும். கிராம உதவியாளர்களை அவமரியாதையாக பேசும்போக்கை வருவாய் துறை அதிகாரிகள் கைவிட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ம் தேதி அம்பை வட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. 25ம் தேதி சேரன்மகாதேவி சப்கலெக்டர் அலுவலகம் முன்பாகவும், அதைத்தொடர்ந்து 30ம் தேதி நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாகவும் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

The post கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Village Helpers Association ,Nellai ,Cheranmahadevi ,Annathurai ,Ambai Vatta ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...