×

நாடு முழுவதும் தேசிய கல்விக்கொள்கை அமல் எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: ஒன்றிய அமைச்சர் சுபாஷ் சர்கார் பேட்டி

சென்னை: தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தியிருக்கிறோம். எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் கூறினார். மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் தலைமை தாங்கி, உள்கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தேசிய அளவில் இருந்து சர்வதேச அளவுக்கு இயங்க தொடங்குகிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் இந்த நிறுவனத்தை பலரும் தேடி வருவார்கள். இதுவரை 3 ஆயிரம் ஆசிரியர்கள் 107 நாடுகளில் இருந்து வந்து பயிற்சி பெற்று சென்றிருக்கிறார்கள். இது மென்மேலும் உயரும். தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தியிருக்கிறோம். எந்த மாநில அரசும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதில் சில உள்ளீடுகளை கொண்டு வர பரிந்துரைத்து இருந்தார்கள். அதனையும் உள்வாங்கி ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கையில் சேர்த்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மாணவர்கள், பெற்றோருக்கு நன்மைகளை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post நாடு முழுவதும் தேசிய கல்விக்கொள்கை அமல் எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: ஒன்றிய அமைச்சர் சுபாஷ் சர்கார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Minister Subhash Sarkar ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...