×

அதிமுகவுடனான கூட்டணி முறிந்த நிலையில் தமிழக பாஜ மையக்குழு கூடியது: தனித்து ேபாட்டியிடுவது குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: அதிமுகவுடனான கூட்டணி முறிந்த நிலையில் பாஜ மையக்குழு நேற்று கூடியது. இதில் தனித்து போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் ெவளியாகியுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கூட்டணியில் இருந்து அதிமுக விலகி உள்ளது. எனவே, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தனியாக தேர்தலை எதிர்கொள்வது, தேர்தல் வேலைகளை துரிதப்படுத்துவது, பூத் கமிட்டி குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் எந்த எந்த கட்சியை கூட்டணியில் இணைத்து கொள்ளலாம், தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தலை சந்திக்கும் வகையில் பல்வேறு வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டம் நடைபெற்ற இடத்தில் மையக்குழு நிர்வாகிகள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

The post அதிமுகவுடனான கூட்டணி முறிந்த நிலையில் தமிழக பாஜ மையக்குழு கூடியது: தனித்து ேபாட்டியிடுவது குறித்து முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu BJP Central Committee ,AIADMK ,CHENNAI ,BJP central committee ,Dinakaran ,
× RELATED சட்டப்பேரவை வளாகத்தில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு..!!