×

எக்ஸ்பிரஸ் ரயிலில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் பறக்கும்படை தாசில்தார் நடவடிக்கை காட்பாடி ரயில் நிலையத்தில்

வேலூர், அக்.11: காட்பாடி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை தாசில்தார் பறிமுதல் செய்தார். ஆந்திரா, கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக வேலூர் பறக்குப்படை தாசில்தார் விநாயகமூர்த்திக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று மாலை காட்பாடி ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது சீட்டுக்கு அடியில் சிறிய சிறிய மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை சிவில் சப்ளை குடோனில் ஒப்படைத்தனர்.

The post எக்ஸ்பிரஸ் ரயிலில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் பறக்கும்படை தாசில்தார் நடவடிக்கை காட்பாடி ரயில் நிலையத்தில் appeared first on Dinakaran.

Tags : Thazildar ,Kadpadi ,railway station ,Vellore ,Dazildar ,Kadpadi railway station ,Batapadi Thazildar ,Dinakaraan ,
× RELATED வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகைக் கடையில் கொள்ளை முயற்சி..!!