×

பள்ளிப்பட்டு அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே, கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை கால்நடை மருந்தக எல்லைகுட்பட்ட கேசவராஜ்குப்பத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.  இம் முகாமை திருத்தணி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் தாமோதரன் துவக்கி வைத்தார்.

கால்நடை உதவி மருத்துவர் பரணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் அமுதா ஆகியோர் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலட்டுத்தன்மை போன்ற பரிசோதனை மேற்கொண்டனர். இதில், மொத்தம் 1,009 கால்நடைகள் உரிமையாளர்கள் பயனடைந்தனர். மேலும், கலப்பின கிடாரிகள் பேரணி நடத்தி சிறந்த கலப்பின கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த கால்நடை விவசாயிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டது. இம் முகாமில் 90 விவசாயிகள் கலந்துகொண்டனர்.

The post பள்ளிப்பட்டு அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Pallipattu ,Kesavarajkuppam ,Podhaturpet Veterinary Hospital ,Pallipatu ,Dinakaran ,
× RELATED வெயிலில் சுருண்டு விழுந்து ஆடு மேய்த்தவர் பரிதாப பலி