×

சோழவரம் பகுதிகளில் சரிந்து விழும் நிலையில் இருந்த மின்கம்பங்கள் சீரமைப்பு

புழல்: சோழவரம் பகுதிகளில், சரிந்து விழும் நிலையில் இருந்த மின்கம்பங்கள் சீரமைக்கப் பட்டன. சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் சாந்தி நகர், வெண்மணி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் எலும்புக்கூடு போல காட்சியளித்தன. மேலும் அவைகள் வளைந்து ஆபத்தான நிலையில் இருந்தன. பலத்த காற்று வீசினால் எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையிலும் இருந்தன.

இதனால் விபரீதம் நடக்க வாய்ப்பு ஏற்பட்டது. இதுபோன்ற உடைந்த மின்கம்பங்களை மாற்றும்படி பலமுறை அலமாதி மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். வரக்கூடிய மழைக்காலத்திற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மின்வாரிய உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அங்கு மின் கம்பங்கள் வைக்கப்பட்டன.

The post சோழவரம் பகுதிகளில் சரிந்து விழும் நிலையில் இருந்த மின்கம்பங்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Cholavaram ,Alamathi ,Cholavaram Union ,
× RELATED மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி