×

மதுராந்தகம் தொகுதியில் பணிபுரியும் மகளிருக்காக விடுதி அமைக்க வேண்டும்: சட்டசபையில் மரகதம் குமரவேல் எம்எல்ஏ வலியுறுத்தல்

மதுராந்தகம்: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் (அதிமுக) பேசுகையில் மதுராந்தகம் தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கிருந்து பணிக்கு செல்ல வேண்டும் என்றால் பொது போக்குவரத்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், அவர்கள் பணிக்கு சென்று வர சிரமப்படுகின்றனர். மதுராந்தகம் நகரில் இருந்து காட்டாங்கொளத்தூர், ஓரடகம், சிறுசேரி மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் தொழிற்பேட்டையில் பணியும் இவர்களின் வசதிக்காக தனியார் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது.

மேலும் ரயில் போக்குவரத்தும் உள்ளது. எனவே, மதுராந்தகம் நகர் பகுதியில் தோழி மகளிர் விடுதி அமைக்கப்படால் அவர்கள் அங்கிருந்து பணித்தலங்களுக்கு செல்ல உதவியாக இருக்கும். எனவே, மதுராந்தகம் நகர் பகுதியில் மகளிர் தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், ‘பெண்களின் அதிக பணி பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிபுரியும் மகளிர் விடுதி அமைத்திட வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொள்கையாக அறிவித்து இந்த துறைக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி அடையாறு, விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திருநெல்வேலி, சேலம் ஆகிய புதிதாக நவீனப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. திருச்சி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தோழி விடுதி செயல்பட்டு வருகிறது. மேலும், தாம்பரம், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி, செண்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய இடங்களில் தோழி விடுதி கட்டும் பணி நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இல்லாத எல்லா மாவட்டங்களில் மகளிர் விடுதி அமைக்க வேண்டும் இடம் தேர்வு செய்து அளிக்கும்படி மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளோம். உறுப்பினரின் கோரிக்கையும் தேவையை பொறுத்து அரசு பரிசீலிக்கும்.

மரகதம் குமரவேல்: கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மற்றும் குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமிகள், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட பெண்கள் தங்குவதற்கான சேவை இல்லம் மதுராந்தகம் தொகுதியில் அமைக்க வேண்டும். அமைச்சர்: தாம்பரத்தில் சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. அங்கு தங்கும் பிள்ளைகளுக்கு கல்வி அளிக்கிறோம்.

தொழிற்பயிற்சி அளிக்கிறோம். அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கப்பட்டு அவர்கள் எதிர்காலத்தில் வேலை தேடும் அளவுக்கு அரசு தேர்வு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி மதுராந்தகம் பெண்கள் அங்கே தங்கி பயனடையலாம். ஏனென்றால் அங்கு தங்கும் வசதி நிறைய உள்ளது. அந்த இடத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post மதுராந்தகம் தொகுதியில் பணிபுரியும் மகளிருக்காக விடுதி அமைக்க வேண்டும்: சட்டசபையில் மரகதம் குமரவேல் எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Madhuranthakam ,Marakatham Kumaravel ,MLA ,Madhurandakam ,ADMK ,Legislative Assembly ,Maduraandakam ,
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள்...