×

எடியூரப்பா மீதான ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை: அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

பெங்களூரு: கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்தபோது, பெங்களூருவில் வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பொறுப்பு பெங்களூரு பெருநகர் வளர்ச்சி குழுமம் (பிடிஏ) விடம் ஒப்படைக்கப்பட்டது. கட்டுமான பணி தொடர்பாக டெண்டர் விட்டதில் ரூ.12 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் இதில் முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு தொடர்புள்ளதாகவும் வழக்கறிஞர் டி.ஜெ.ஆப்ரஹாம், பெங்களூரு லோக்ஆயுக்தா போலீசில் புகார் கொடுத்தார். அதில் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, மருமகன் சஞ்சய்ஸ்ரீ, பேரன் சசிதர்மரடி ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

அதை எதிர்த்து கடந்தாண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். ஓராண்டு காலமாக விசாரணை நடத்தாமல் நிலுவையில் உள்ள வழக்கை விசாரணை நடத்தும்படி வழக்கறிஞர் டி.ஜெ.ஆப்ரஹாம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு நேற்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நிதிபதிகள் ஜெ.பி.வர்த்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்ட நீதிபதிகள்அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

The post எடியூரப்பா மீதான ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை: அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Yeddyurappa ,Supreme Court ,Bengaluru ,Chief Minister ,Karnataka ,Dinakaran ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...