×

மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் அவர்களின் தந்தை பாஷா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் அவர்களின் தந்தை பாஷா உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். நாசர் அவர்களின் தந்தை பாஷா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் தட்டான்மலை தெருவில் வசித்து வந்த நாசரின் தந்தை மாபுப் பாஷா (வயது 95) உடல் நலக்குறைவால் உயிரிந்துள்ளார். சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாசரின் சகோதரர் மற்றும் தந்தை செங்கல்பட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நாசரின் தந்தையுமான மெஹமது பாஷா (95) உடல் நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். அவரது உடல் நாசரின் சகோதரர் ஜவகரின் வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரை துறையினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை நாளை அடக்கம் செய்ய திட்டமிடப்பட்டும் உள்ளது.

* முதல்வர் இரங்கல்

“மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் அவர்களின் தந்தை பாஷா அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன்.தந்தையின் மறைவால் வாடும் நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

The post மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் அவர்களின் தந்தை பாஷா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : South Indian Actor's Association ,Nassar ,Basha ,Stalin ,South Indian Actor Association ,Nasser ,President ,BC ,
× RELATED நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக ரூ.1 கோடி...