×

பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்படும் ஊட்டி ரயில் நிலைய பூங்கா: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி: ஊட்டி ரயில் நிலைய பூங்கா தற்போது பராமரிப்பின்றி பொலிவிழந்து காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி ரயில் நிலையம் 1908ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ரயில் நிலையம் முன் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது.

தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியின் போது தோட்டக்கலை துறை சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்று ஊட்டி ரயில் நிலைய பூங்கா சுழற்கோப்பைகள் வென்றுள்ளது. அதன்பின் கடந்த 4 ஆண்டுகளாக பராமரிப்பின்றி காட்சியளித்தது. தொடர்ந்து இந்த ஆண்டு கோடை சீசனை முன்னிட்டு பூங்காவில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு நீரூற்றுகள் ஏற்படுத்தப்பட்டு பொலிவுபடுத்தப்பட்டது. மேலும் பல வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.

கடந்த மே மாதம் மலர் கண்காட்சியின் போது சிறந்த பூங்காவாக ஊட்டி ரயில் நிலைய பூங்கா தேர்வு செய்யப்பட்டு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இந்நிலையில் பூங்கா தற்போது பராமரிப்பின்றி புற்கள் வளர்ந்து பொலிவிழந்து காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். ரயில் நிலையத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்திடும் வகையில் இப்பூங்காவை ஆண்டுமுழுவதும் பராமரிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்படும் ஊட்டி ரயில் நிலைய பூங்கா: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Feeder train station ,Feeder ,Nilgiri District ,Railway Station Park ,Dinakaraan ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி...